சிங்கப்பூரின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் விலாசினி! ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த அரசியல் வாழ்க்கை..
சிங்கப்பூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றார்.
1950களின் தொடக்கத்தில் சிங்கப்பூர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது அங்கு நன்கு படித்திருந்த மலையாள மக்கள் இருந்தனர். மெட்ராஸ் பல்கலை. போன்ற நாட்டின் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இருந்து படித்தவர்கள் சிங்கப்பூரில் இருந்தனர். அப்போது பச்சிளம் குழந்தையின் தாய் ஒருவர், வீட்டிலேயே இருந்து தனது படிப்பை வீணாக்கப் போவதில்லை என்றும், பொது வாழ்வில் ஈடுபடவும் முடிவு செய்தார். ஆம். 30 வயதான விலாசினி மேனன், 1951-ம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தினார். செலேட்டர் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.
அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே பலரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார். தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய தான் வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை எனவும், ஆனால் செயல்களை செய்து முடிக்க மக்களின் நம்பிக்கையை கேட்பதாகவும் கோரினார். பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சுயேட்சை வேட்பாளர்களின் கடினமான சூழலையும் எதிர்கொண்டார். மேலும் பேசிய அவர் “ கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும். அவருக்கு கட்சியின் மரியாதை, முழக்கங்கள் இருக்கும். ஆனால் சுயேட்சை வேட்பாளர் தனது சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் மாற்றி யோசித்த ரோஹன்.. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எனினும் விலாசினி 1951 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் 43% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் சிங்கப்பூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றார். சிங்கப்பூரில் இருந்த மலையாள சமூகத்தினர் இந்த வெற்றியை கொண்டாடினர். சிங்கப்பூர் செய்தித்தாளான The Straites Times 1951-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில் “ சிங்கப்பூரின் முதல் பெண் சட்டம்னற கவுன்சிலர் விலாசினி நேற்று தனது நண்பரின் வீட்டில் மேனன் தனது 16 மாத குழந்தையுடன் விளையாடினார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஒரு நண்பரின் வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விலாசினி தனது வெற்றியை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ வீட்டுப் பொறுப்புகளுடன் சேர்ந்து பொது வாழ்க்கையிலும் நான் ஈடுபட விரும்புகிறேன். ஒரு நல்ல சட்டமன்ற கவுன்சிலராக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு மோசமான இல்லத்தரசியாக இருக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த சாதனைகள் குறித்து பெரிதாக தகவல் கிடைக்கவில்லை என்றாலும், பீர் மீதான வரியை உயர்த்திய சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைக்கு விலாசினி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு விலாசினி தனது கணவருடன் சென்னைக்கு வந்துவிட்டார். அடுத்த கவுன்சில் பொதுக்கூட்டத்தில் விலாசினி கலந்துகொள்ளவில்லை எனில், அவர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 1952 ஆகஸ்ட் மாதம், அவர் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் அது தான் அவரின் பொதுவாழ்க்கையின் முடிவுக்கு தொடக்கமாக இருந்தது.
குற்றவியல் நம்பிக்கை மீறல் என்ற குற்றச்சாட்டில் விலாசினியையும், அவர் கணவரையும் கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் போலீஸ் மெட்ராஸ் போலீஸூக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து விலாசினி மற்றும் அவரின் கணவர் கைது செய்யப்பட்டனர். எனினும் இதனை ஒரு சிவில் தகராறு என்று நிரூபிக்க சில வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
விலாசினி தனது ராஜினாமா கடிதத்தை சிங்கப்பூர் ஆளுநர் ஜே.எஃப். நிக்கோக்கு அனுப்பினார். விலாசினி விடுவிக்கப்பட சில வாரங்கள் ஆனது. ஆனால் அவர் மீண்டும் அரசியலில் நுழைய வேண்டாம் என்று முடிவெடுத்தார். அவரின் காலியான பதவிக்கு மற்றொரு மலையாளி பி.டி. நாயர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் ஆணாதிக்க சமுதாயத்தில் விலாசினி ஒரு முன்னோடியாக இருந்தார். ஆனால் அவரின் கணவர் தொடர்பான ஊழல் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருந்தது. எனினும் சிங்கப்பூர் வரலாற்றில் தட பதித்து சென்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்!!