Asianet News TamilAsianet News Tamil

இப்படியா? அப்படியா? எப்படி தாலி கட்டுறது? கல்யானத்தில் கன்பியூஸ் ஆன விக்கல்ஸ் விக்ரம்.. வைரல் வீடியோ..

தனது திருமணத்தில் தாலி கட்டும் போது நிகழ்வை கண்டண்டாக மாற்றி, விக்கல்ஸ் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vikkals vikram get confused in his marriage that how to tie thali.. video goes viral
Author
First Published Jul 8, 2023, 3:58 PM IST

ஒரு பாடலின் ரெக்கார்டிங் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் விக்கல்ஸ் டீம். Vikkals என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் இந்த குழுவினரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வளவு ஏன் விஜய் தொடங்கி ஏ.ஆர் ரஹ்மான் வரை பல்வேறு பிரபலங்களும் இவர்களின் வீடியோ பாராட்டி உள்ளனர். சமீபத்தில் விக்கல் டீம் பதிவிட்ட வீடியோ, ஏ.ஆர். ரஹ்மான் ரீ கிரியேட் செய்த வீடியோ வைரலானது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய், இவர்கள் போட்ட வீடியோவை குறிப்பிட்டு பேசினார். மேலும் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் வாழ்க்கையை ஒப்பிட்டு பல நகைச்சுவை வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த விக்கல்ஸ் டீமின் முக்கியமானவர்களின் ஒருவர் தான் விக்ரம். ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வரும் விக்ரமுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அனிதா செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் விக்ரம்.

மேலும் நம்ம வீட்டு கல்யாணம் என்ற தலைப்பில் விக்ரம் – அனிதாவின் திருமணத்தை லைவ் டெலிகாஸ்டிங் செய்தனர். இந்த நிலையில் தனது திருமணத்தில் தாலி கட்டும் போது நிகழ்வை கண்டண்டாக மாற்றி, விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாலி கட்டும் போது ஏற்படும் குழப்பம் என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ எப்படி தாலி கட்ட வேண்டும் என்று ஐயர், வழிமுறைகளை சொல்கிறார்.. இப்படியா, அப்படியா என்று குழப்பமாகும் விக்ரம் சரி. ஓ.கே என்று கூறுகிறார். உடனே ஐயர், பிராக்டிஸ் பண்ணிக்கோ பா என்று கூறுகிறார். உடனே மணப்பெண், பிராக்டிஸ் பண்ணிட்டு வர சொன்னேன்ல என்று கேட்கிறார். உடனே விக்ரம் ‘ நான் பிராக்டிஸ் கூட உனக்கு மட்டும் தான் தாலி கட்டுவேன் பேபி என்று கூறுகிறார். உடனே இன்னொரு ‘ நீங்க ஒரு முடிச்சு. உங்க அக்கா 2 முடிச்சு என்று கூறுகிறார். பின்னர் ஒருவழியாக தாலி கட்டுகிறார்.

 

தாலி கட்டி விட்டு கையை எடுக்கும் போது, கைய எடுக்காத பா என்று கூறும் ஐயர், இன்னும் 2 முடிச்சு உங்க அக்கா போடனும். கைய எடுக்காத என்று ஐயர் கூறுகிறார்.. இந்த வீடியோ இதுவரை 81,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பலரும் இந்த வீடியோவை பார்த்து ரசித்ததுடன், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் கல்யாணத்தை கண்டண்ட் ஆக்கிட்டீங்க விக்ரம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்கள்.. அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios