பிகிலுக்கு சங்கு ஊதிய ட்விட்டர் "ட்ரெண்டிங்"...! முதலிடத்தில் #BigilDisaster

தீபாளையை யொட்டிஇன்று வெளியான பிகில் படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை  கொடுத்து உள்ளது. அதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில்  #BigilDisaster என படதோல்வியை உணர்த்தும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ட்வீட் தான் தற்போது இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து,ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பிகில் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் படுமோசமான கமெண்ட்களை வாங்கி வருகிறது. அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் புரோகிராம், செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் எதிர்பார்த்தது போலவே அரசியல் பேசி அனைவரையும் தெறிக்க விட்டார் விஜய். பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் அடித்தவர், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதற்கு மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். அரசியலில் புகுந்து விளையாடுங்க ஆனா, அரசியல் பார்க்காதீங்கன்னு ரசிகர்களுக்கு தடாலடி அறிவுரை கூறிய விஜய்,  சுபஸ்ரீ விவகாரத்தில் யாரை எங்க உட்கார வைக்கனுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும் என கருத்து தெரிவிக்க ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. 

இந்த நிலையில் இன்று வெளியான பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்காக இரவு முதலே காத்திருந்த விஜய் ரசிகர்கள் படத்தை திரையிட தாமதம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஆராவாரமா படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஏன்னா, மேடையில் விஜய் பேசினா அரசியலை, திரையில் எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

படத்தோட முதல் பாதி நல்லவே இல்லைன்னு, ஒரே காட்சிகள் திரும்ப, திரும்ப வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் படுமோசமான விமர்சனங்கள் உலா வருது. மேலும் படத்தின் இயக்குநரான அட்லீ கதையில கவனம் செலுத்தவே இல்லைன்னு, அறிவில்லாத அட்லீ பல படங்களில் இருந்து காட்சியை சுட்டு படத்தை எடுக்க முடியாம அரைகுறையா முடிச்சியிருக்கிறதாகவும் ரசிகர்கள் கொலைவெறியில கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. எது எப்படியோ பல சர்ச்சைகளோட வெளியான பிகில் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணாமல் ரசிகர்களை வெறியேற்றி இருக்கிறது. இசை வெளியிட்டு விழாவில் அட்லி பேசியதை மேற்கோள்காட்டியுள்ள ரசிகர்கள் இதுக்கா இவ்வளவு பந்தா காட்டுன ன்னு அட்லியை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில் தான் #BigilDisaster என படதோல்வியை உணர்த்தும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ட்வீட் தான் தற்போது இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.