Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி தகவல்..! அடுத்த 2 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

very hot climate in next 2 days in tamilnadu
Author
Chennai, First Published Apr 18, 2020, 4:42 PM IST

அதிர்ச்சி தகவல்..! அடுத்த 2 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! 

அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் கடும் வெயில் நிலவும் என்பதால் காலை 11 மணி முதல் 3 மணி  வரை  மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்து  உள்ளது 

கொரோனா என்ற ஒரு பிரச்சனை இல்லை என்றால் தற்போது வெயில் மழை பாராது மக்கள் எப்படி மிக வேகமாக இயங்கி வந்தார்களோ அதே போன்று தான் தற்போதும் இருந்து இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது ஆனால், தற்போது இதற்கெல்லாம் மாற்றாக கொரோனா எதிரொலியால் மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி இடுகின்றனர் 

very hot climate in next 2 days in tamilnadu

அதே வேளையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கமும் ஒருபக்கம் அதிகரித்து உள்ளது. இந்த ஒரு தருணத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நிலைமை இப்படி இருக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

very hot climate in next 2 days in tamilnadu

இதற்கு முன்னதாக மற்ற மாவட்டங்களில் பதிவாகும் இயல்பான வெப்ப நிலையைவிட பல்வேறு மாவட்டத்தில் 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட காலை 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த நேரம் கோடை காலம் என்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு ஏதுவான ஒரு காலமாக அமைந்வெளியில் துள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லக்கூடியவர்கள் அடுத்த 2 தினங்களுக்கு அதிக வெப்பநிலை நிலவுவதால் காலை 11 மணி முதல் 3வரை யாரும் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios