உயிர்த்தியாகம் செய்ய தயார்..! CAA-வுக்கு எதிராக அடுத்த லெவலுக்கு சென்ற வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்...! 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லாம் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது தடியடி நடத்தி போராட்டம் கலைக்கப்பட்டது. போலீசாரின் இந்த தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் ஆங்காங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் வேலூர் தொகுதி எம்பி கதிர்ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் முதல் பலி வேண்டும் என்றால் என்னுடைய உயிர்த்தியாகம் கண்டிப்பாக இருக்கும் என அனைவரும் அதிர்ந்து போகும் அளவுக்கு பேசினார். எனக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் என் தாய் போன்றவர்கள். என் தாய்க்கு ஒன்று என்றால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன்.. கண்டிப்பாக போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய கதிர் ஆனந்த், 

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கடைசி கையெழுத்து போடும் வரை ஒன்றாக இணைந்து போராட வேண்டும். உங்களது போராட்டம் ஒரு நியாயமான போராட்டம். இந்த போராட்டத்தை நீங்கள் எந்த நேரத்திலும் கை விடக்கூடாது. உங்களுக்கு தோள் கொடுப்பவனாக உங்களோடு நான் துணை நிற்பேன் என பேசினார்.

CAA, NRC,NPR - க்கு எதிரான இந்த போராட்டத்தை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வேலூர் கோட்டை பகுதியில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு இருக்க நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தீவிர சோதனைக்கு பிறகே  கோட்டைக்குள் செல்லும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.