பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்ட விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது வனிதா விஜயகுமாரின் பேச்சு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது நாள் நிகழ்வுகளை நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் வனிதா விஜயகுமாரின் பேச்சு அனல் பறக்கும் விதத்தில் அமைந்திருந்தது. காரணம் பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்திய கப்பை யாரோ ஒருவர் சுத்தம் செய்யாமல் டேபிள் மீது வைத்து உள்ளனர். யார் இதை இப்படி செய்தார்கள்..? ஏன் எடுத்து சுத்தம் பண்ண வில்லை? என அபிராமி தொடர்ந்து கத்திக்கொண்டே கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா மிதுன் calm down, calm down என சொல்கிறார். இதற்கு அபிராமி, "நான் உன்னிடம் கேட்கவில்லை... பொதுவாக தான் சொன்னேன்.. நீ எதற்கு மூக்கை நுழைக்கிறாய்" என கோபப்பட்டு இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

இந்த பஞ்சாயத்தை தற்போது பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்கும் வனிதாவிடம் சொல்கின்றனர். அதற்கு வனிதா அபிராமியை சமாதானப்படுத்துகிறார். அதற்கு முன்னதாக மீரா மிதுனிடம்,  "நீ ஏன் கேட்கிறாய் உன்னை குறிப்பிட்டுச் சொன்னால் மட்டுமே, நீ பதில் அளித்து இருக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வணிதாவிடமும் தொடர்ந்து "காம் டவுன்..காம் டவுன்" என மீரா மிதுன் சொல்லவே வனிதாவும் டென்ஷன் ஆகிறார்.

பின்னர் அபிராமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து. " இதையெல்லாம் கண்டுகொள்ளதே ... அவள் நடிக்கிறாள். நான் ஒரு இயக்குனரின் உதவியாளர், எனக்கு தெரியும் யார் நடிக்கிறார்கள்" என சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்போது சாக்கடையில் "கல் எறிந்தால் அது நம் மீதுதான் திரும்பும்" என உதாரணமும் சொல்லிவிட்டு இதை என் அப்பன் தான் சொன்னான் என பெற்ற தந்தையே மரியாதை கூட இல்லாமல் பேசுகிறார் வனிதா விஜயகுமார். இது மற்ற சக போட்டியாளர்களை சற்று சிந்திக்க வைத்து உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். 

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக உள்ள வனிதா மற்றவர்களின் பிரச்சனையை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் பொறுப்பில் உள்ளார். ஆனால், தன்னுடைய அப்பா விஜகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு அவன்  இவன் என பேசுவது அவரின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.