இல்லத்தரசிகளே உங்கள் வீட்டை மென்மேலும் அழகாக்கும் ஈஸியான 5 வீட்டு உபயோக குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து ,மேலும், பயன் பெறுங்கள்.
இல்லத்தரசிகளே உங்கள் வீட்டை மென்மேலும் அழகாக்கும் ஈஸியான 10 வீட்டு உபயோக குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து ,மேலும், பயன் பெறுங்கள்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். இப்போது இருக்கும் பிஸியான வாழ்கை முறையில், நாம் எதையும் சரியாக கவனிப்பது கிடையாது. எல்லா வேளையும் இழுத்துப் போட்டு செய்வது என்பதும் முடியாத காரியமாகி விட்டது.

உங்கள் வீட்டின் அளவு சிறியதோ, பெரியதோ அதனை நீங்கள் முறையாக பயன்படுத்த புத்திசாலித்தனமும், புதுமையான சிந்தனைகளும் தேவை. நம்முடைய நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தும் வகையில் சில வீட்டு குறிப்புகளையும், சமையல் குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில், தற்போது இந்த 5 வீட்டு மற்றும் சமையல் குறிப்புகள் இனிய இல்லத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு எந்த அளவிற்கு உபயோகப்படும் என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டிப்ஸ்:
துணி துவைக்கும் பொழுது அதில் சுருக்கம் இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் அலசி முடித்த பின்பு கடைசியாக ஒரு முறை நாலைந்து சொட்டுகள் கிளிசரின் சேர்த்து அலசிப் பாருங்கள் சுருக்கம் மறையும்.
டிப்ஸ் 2:
துணி காயப் போட நைலான் கயிறை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கியவுடன் முதலில் கொஞ்சம் சோப்பு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அலசி பயன்படுத்திப் பாருங்கள், நீண்ட நாட்கள் அறுந்து போகாமல் உழைக்கும்.
டிப்ஸ் 3:
எண்ணெய் பாட்டிலை கையாளும் பொழுது திடீரென கை தவறி எண்ணெய் கீழே சிந்திவிட்டால் உடனே யோசிக்காமல் அதன் மீது கோலப் பொடியை தூவி விடுங்கள். பிறகு துடைத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் பசை இல்லாமல் அழகாக வந்து விடும்.
டிப்ஸ் 4:
எண்ணெய் பாட்டிலை கையாளும் பொழுது திடீரென கை தவறி எண்ணெய் கீழே சிந்திவிட்டால் உடனே யோசிக்காமல் அதன் மீது கோலப் பொடியை தூவி விடுங்கள். பிறகு துடைத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் பசை இல்லாமல் அழகாக வந்து விடும்.

டிப்ஸ் 5:
மிக்ஸி கிரைண்டர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்யும் பொழுது பழைய டூத் பிரஷில், டூத் பேஸ்ட் கொஞ்சமாக வைத்து தேய்த்து கழுவி பாருங்கள், புதியது போல பளிச்சென இருக்கும்.
