Asianet News TamilAsianet News Tamil

தயிரை இப்படி பயன்படுத்தியது உண்டா..? முகம் பளபளப்பாக மிளிரும்..!

நாம் தினந்தோறும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

use curd for facial
Author
Chennai, First Published Mar 13, 2019, 4:20 PM IST

நாம் தினந்தோறும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
  
நம் தலையில் உள்ள பொடுகை எப்படி அகற்ற வேண்டும்..? 

ஒரு பக்கம் வறட்சி                

இன்னொரு பக்கம் பொடுகு தொல்லை என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். பொதுவாகவே பொடுகை நம் தலையிலிருந்து நீக்கினாலே நம் முகம் தூய்மையாக இருக்கும். இல்லை என்றால் முகத்தில் பல பிரச்சனை வரும்.

பொடுகு...! 

தயிருடன் வெந்தயம் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலைமுடி தேய்த்து, அரை மணி நேரம் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு அல்லது சிகைக்காய் கொண்டு வாஷ் செய்ய வேண்டும்

இது போன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் பொடுகு பிரச்சனை தீர்ந்து விடும் 

use curd for facial

பளப்பளப்பாக மாற....!

தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். அதாவது 20  செம்பருத்தி இதழ்,10  வேப்பிலை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தயிர் சேர்ந்து, பின்னர் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மசாஜ் செய்து பின்னர், தலைக்கு குளிக்கலாம்.இவ்வாறு செய்து வந்தால், தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உத்திரவை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என தெரியுமா ..?

3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும்.

use curd for facial 

பின்னர் அரை மணி நேரம் கழித்து வாஷ்  செய்து விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று விடும். மேற்குறிப்பிட்ட உள்ள சில டிப்ஸ் தினமும் பயனப்டுத்தி வாருங்கள். கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios