உஷார்.. சதை உண்ணும் பாக்டீரியா தாக்கியதால் சிறுவனுக்கு நேர்ந்த கதி..! இந்த அறிகுறிதான் காரணம்..

மாமிசம் உண்ணும் அரிய வகை பாக்டீரியாவால் தாக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

US Boy Dies From Flesh Eating Bacteria

அமெரிக்காவில் வசித்த 11 வயது சிறுவன் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கும்போது அவரது கணுக்காலில் முறுக்கப்பட்ட உணர்வுடன் கூடிய வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை சதை உண்ணும் பாக்டீரியா தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

ஜெஸ்ஸி பிரவுன் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, அவர் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார் என கூறப்பட்டது. அவர் எல்லா வகையிலும் ஆரோக்கியமாக காணப்பட்டார். சில வாரங்களுக்கு முன்னர் ஜெஸ்ஸி பிரவுன் டிரெட்மில்லைப் பயன்படுத்தும் போது கணுக்காலில் காயம் அடைந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது முழு கால்களிலும் சிராய்ப்பு போன்ற தடயங்கள் காணப்பட்டுள்ளது. 

அதுமட்டுமில்லாமல், சிவப்பு நிற புள்ளிகளும் காணப்பட்டுள்ளன. இதை கண்ட பெற்றோர் மருத்துவர்களை அழைத்து பரிசோதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் சிறுவன் பிரவுனுக்கு, ஸ்ட்ரெப் - ஏ தொற்று இருப்பதாகத் தெரிவித்தனர். அது தான் சதை உண்ணும் பாக்டீரியா தொற்று. சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் கணுக்கால் சுருட்டப்பட்டிருந்ததால் அங்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தொற்று தீவிரம் காரணமாக சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். 

Flesh Eating Bacteria

அமெரிக்க குழந்தை மருத்துவர்கள், குழந்தைகளிடையே ஸ்ட்ரெப்-ஏ தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். சிலருக்கு சுவாச தொற்றுக்கு பிறகு தான் பாக்டீரியா தாக்குகிறது. அதாவது சுவாசப்பாதை வழியாக நோய் தாக்கலாம். இந்த தொற்று மரணத்தை கூட ஏற்படுத்தலாம். 

இதையும் படிங்க: ஹோம குண்டத்தில் போடும் சமித்துகளும்.. அனைத்து வகை பீடைகளையும் விரட்டும் அதன் நன்மைகளும்.. முழுத்தொகுப்பு..!

குரூப்-ஏ ஸ்ட்ரெப் என்பது தொண்டை அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியா. இதனால் வரும் நோய் எல்லாமே கடுமையானவை அல்ல, ஆனால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், சதை உண்ணும் நோய் போன்ற இரண்டாம் நிலை தொற்றுநோயை ஏற்படுத்தும் என அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அறிகுறிகள் 

வீக்கம், தோல் சிவத்தல், துர்நாற்றம், காய்ச்சல் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். குரூப் - ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றுகள் சிறிய நோய்கள் முதல் மிகவும் தீவிரமான மற்றும் கொடிய நோய்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க; சிறுநீரக கல் மட்டுமா.. பல்வேறு நோய்களை விரட்டுகிறது ஜாதிபத்திரி எனும் அருமருந்து..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios