ஆரோக்கியமான உறவென்பது காதலை தாண்டி, நேர்மையை சார்ந்திருக்கிறது. பலர் தங்கள் துணையை உண்மையாக நேசித்தாலும் வேறொருவருடன் நெருங்கி பழக வாய்ப்பு, சூழல் அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ளக் காரணம் நேர்மை தவறுதல். ஆண்கள் தான் அதிகமாக நம்பிக்கை துரோகம் செய்வதாகக் கூறப்படும் நிலையில் அதற்கான சூழல்கள் என்ன

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் மீது ஈர்ப்பு குறையாத நிலையில் காரணமே இன்றி பெண்களை ரசிக்கும் - கவர்ந்திழுக்க நினைக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு பார்வை போதும் என்ற நோக்கத்திலாவது கவர்ந்திழுக்க ஆண்கள் நினைப்பது உண்டு. இந்த ஈர்ப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் போதும், சூழல் அமையும் போதும் வேறுவிதமான தாக்கங்கள் ஏற்படுகின்றன.

வீட்டில் எதையோ இழக்கும் போது அவன் கவனத்தை வேறு நபர் மீது திருப்புகிறான். சிரித்து பேசவோ, நெருங்கி பழகவோ, செக்ஸ் வைத்துக் கொள்ளவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அதன் கடைசி இலக்கு பாலுறவு. அதற்குப் பதில் துணையையே அளவுக்கடந்து நேசிக்க முயற்ச்சித்தால் கவனம் எங்கும் செல்லாது காதல் என்பது எதிர்பார்ப்பது மட்டுமல்ல, கொடுப்பதும் கூட. சிலர் தங்கள் துணையை, குழந்தைகளை பொருளாதார ரீதியாக தவிக்க விட்டுவிட கூடாது என்று கருதும்போது இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். பிடிக்காத திருமண பந்தத்திலும் இணைந்திருப்பார்கள் - பிடித்த வேறு பெண்ணுடனும் சேர்ந்து வாழ விரும்புவார்கள். இதில் வெடிப்பதுதன் பூகம்பம்.

பாலுறவில் சில விஷயங்கள் பெண்களுக்கு வலி மிகுந்ததாகவும், அசௌகரியமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அத்தகைய அனுபவங்களை கட்டாயம் பெற வேண்டும் என நினைக்கும் ஆண்கள் ஏமாற்றத் தயாராகிறார்கள். அதுமட்டுமின்றி, அழகு, உடல் வடிவம் என பல காரணங்கள் உள்ளன. சில ஆண்கள் ஏமாற்றுவதற்கு காரணங்களை உருவாக்கிக் கொள்வார்கள். குடி போதை, மன அழுத்தம், சோகம் போன்றவற்றால் மனம் தடுமாறிவிட்டேன் என்பது போல. ஆனால், என்ன காரணங்கள் இருப்பினும், அந்த உறவில் நேர்மை இருந்தால். இந்த காரணங்கள் எல்லாம் தூசாகிவிடும்.