உலகமே பதறி பறிதவித்துக் கொண்டிருக்கும் வேளையில்சிலர் வீட்டைவிட்டு வெளியேறி அலட்சியமாக நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது.  வைரசின் பிறப்பிடமான சீனாவின் உகான் நகரில் வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், இத்தாலி, அமெரிக்கா, பிரான்சு, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. 

இந்நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘’பொருள்களை வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவிய கூடாது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்படுகிறது. மக்களுக்கு இது மிகக் கொடுமையானதாக இருக்கும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருந்து கையெழுத்து கும்பிடுங்கள்.

 ஊரடங்கு மூலம் பொருளாதார பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம் நீங்கள் வெளியே சென்றால் வீட்டிற்கு கொண்டு வரும். 21 நாள்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் உங்களை வந்தடையும்’’ எனத் தெரிவித்துள்ளார். அதையும் மீறி சிலர் சவகாசமாக வெளியேறி கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். இந்த அலட்சியப்போக்கு பேராபத்தில் கொண்டுபோய் சேர்த்து விடும். அது உங்கள் குடும்பத்தினருக்கே கேடாய் முடியலாம். உங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கலாம். உலகமே பதறிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி வெளியேறி கூட்டம் கூடி, நிலைமையை விபரீதமாக்கலாமா? சிந்திக்க வேண்டாமா? நீங்களும் மனிதர்கள்தானே..?

இந்தக் காட்சி கிருஷ்ணகிரியில் 144 தடை உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள், வழக்கம் சென்று வருகின்றனர், யாரும் கண்டுகொள்ளவில்லை.