உதயநிதி ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பயமா..? மனம் திறந்த தாய் துர்கா ஸ்டாலின்..! 

44 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, துர்கா ஸ்டாலின் அவர்கள் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். அதில், அவரின் வாழ்க்கை முறை பற்றியும் உதயா மற்றும் ஸ்டாலின் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

அதில், "நான் எந்த ஊருக்கு போனாலும் முதலில் காலை எழுந்த உடன் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு தான் செல்வேன்... அவ்வளவு ஏன் கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு தினமும் காலை சென்று வருவேன்.. குழந்தைகள் படிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால், என் மகளும் உதயநிதியும் சிறுவயதாக இருக்கும்போது என்னிடம் நன்கு அடி வாங்குவார்கள்... என்னை கண்டாலே உதயாவிற்கு ரொம்ப பயம்... ஆனால் அவங்க அப்பாகிட்ட  மிகுந்த செல்லம்.. அதனால்தான் எதுவாக இருந்தாலும் முதலில் அவங்க அப்பாவிடம் சொல்லிவிட்டு பின்பு எனக்கு தெரியப்படுத்துவான். என்னை பொறுத்தவரையில் சரியாக படிக்க வேண்டும்... சரியான நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும்... என கண்டிஷன் போட்டு வளர்த்தேன்.


 அவர் வரும் வரை நான் வீட்டிற்குள் வரமால் உள்ளே வர மாட்டேன் என உதயா தெரிவிப்பாராம். அதாவது, முரசொலியில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஸ்டாலின் அவர்கள் வீடு திரும்ப இரவு தாமதமாகுமாம். அந்த தருணத்தில் கூட அவர் வந்தால் தான் வீட்டிற்குள் வருவேன்" என வெளியில் இருக்கும் சோபாவிலேயே அமர்ந்து இருப்பாராம் உதயா. 


 இதை எல்லாம் தாண்டி, உதயாவின் கிருத்திகா மீதான காதலை கூட முதலில் துர்கா அவர்களிடம் சொன்னால் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என எண்ணி, ஸ்டாலினிடம் தான் முதலில்  காதல் விஷயத்தை ஓபன் செய்தாராம்... அப்போது கூட பயந்து பயந்து அப்பாவிடம் தனியாக பேச வேண்டும் என கூறி, பின்னர்  மெதுவாக சொன்னாராம் உதயாநிதி. பின்னர் ஸ்டாலின் மூலம் துர்கா அவர்களுக்கு தெரியவரவே, பெரிசா ஒன்னும் கோபப்படவில்லையாம். மேலும் அது எதிர்பார்த்த ஒன்று தான் என கூலாக சொல்லிவிட்டாராம் துர்கா ஸ்டாலின்.

மருமகள் கிருத்திகா பற்றி தெரிவிக்கும் போது ,"நாங்களே தேடி கண்டுபிடித்து இருந்தாலும் இது போல மருமகளை பெற்று இருக்க மாட்டோம்... அவர் மருமகள் அல்ல.. எங்களுக்கு மகள் போன்று தான்.. நானாக மாமியார் மருமகள் போன்று நடந்துகொள்ள மட்டும் .. அம்மா மகள் போன்று எல்லாவற்றையும் நன்கு பேசிக்கொள்வோம்.. என மருமகளை புகழ்ந்து தள்ளி உள்ளார் துர்கா ஸ்டாலின்.