தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் ட்விட்டர் ..!!! ஊழியர்களை அதிரடியாக நீக்க முடிவு......!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபல முன்னணி நிறுவனமான , ட்விட்டர் நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் மிகவும் முக்கியமான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.

ட்விட்டர்யை பொறுத்தவரையில், தொடக்கத்தில் நல்ல வருமானத்தை ஈட்டி வந்தது. ஆனால் தற்போது நஷ்டத்தை சந்தித்து வருவதால், 8 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

நஷ்டத்தை சந்தித்து வரும், ட்விட்டர் ஏற்கனவே இரண்டு முறை தன் நிறுவனத்தை விற்க முயன்றது. ஆனால் யாரும் வாங்க வில்லை. மேலும், கடந்த ஆண்டு, சுமார் 336 பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, தற்போது அந்த நிறுவனம் ஆண்டுதோறும் 400 மில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.