Asianet News TamilAsianet News Tamil

நீக்கப்பட்டது பிரதமர் குறித்த ட்வீட்...! திடீர் மாற்றம் ஏன்...?

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களின் மக்கள் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். 

tweet about prime minister removed
Author
Chennai, First Published Aug 8, 2019, 1:14 PM IST

இன்று மாலை பிரதமர் மோடி வானொலியில் மக்களுடன் உரையாற்றுவார் என்ற ட்வீட்டை அதிரடியாக நீக்கியுள்ளது அகில இந்திய வானொலி.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களின் மக்கள் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அப்போது சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ட்வீட் நீக்கியது அகில இந்திய வானொலி.

tweet about prime minister removed

நேற்று மாலையே உரை நிகழ்த்த இருந்தார் மோடி. ஆனால், எதிர்பாராத விதமாக சுஷ்மா சுவராஜ்  இறந்ததால், இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி சில முக்கிய முடிவுகள் பற்றியும், சில அறிவிப்பையும் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது

tweet about prime minister removed

குறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்தும் பேசுவார் என்றிருந்த நிலையில், இந்த ட்வீட் நீக்கப்பட்டு உள்ளது. 

இதற்கு முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மார்ச் 27 ஆம் தேதியன்று, "நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன்; முக்கிய தகவல்களை தெரிவிக்க இருக்கிறேன். அனைவரும் ஊடகங்கள் ரேடியோ மூலம் கவனியுங்கள் என தெரிவித்திருந்தார் மோடி. பின்னர்  நிகழ்த்திய உரையில், இந்தியா அனுப்பிய மிஷன் சக்தி செயற்கைகோள், நம் நாட்டு பாதுகாப்பிற்காக தான் என்றும் தெரிவித்து இருந்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios