அமெரிக்க அதிபர் தேர்வு செய்த "ஓர் தமிழர்"..! உயரிய பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் "டிரம்ப்"..!  

அமெரிக்காவில் உள்ள, அந்நாட்டின் தேசிய அறிவியல் வாரியம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் இதன் உறுப்பினராக தமிழரான சுதர்சன பாபு என்பவரை நியமித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்து உத்தரவிட்டுள்ளதாக  வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளது. 

கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 1986 ஆம் ஆண்டு தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த இவர் சென்னையில் உள்ள ஐஐடியில் 1988 ஆம் ஆண்டு தொழில் துறை உலோகவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன்பிறகு முனைவர் பட்டம் பெறுவதற்காக தொடர்ந்து படித்த அவர், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்றார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, தன்னுடைய பணிகளில் சிறந்து விளங்கிய அவர் தற்போது ப்ரெடிசென் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டராகவும் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் தலைவராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு உலோகவியல், மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளில் 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் உண்டு. இந்த ஒரு நிலையில் இவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்கு தேசிய அறிவியல் வாரியத்தில் உறுப்பினராக சுதர்சன பாபுவை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை நியமித்ததன் மூலம் தேசிய அறிவியல் வாரியத்தின் மூன்றாவது அமெரிக்க இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். இதற்கு முன்னதாக சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் கரிமெல்லா அகியோரும் உறுப்பினராக உள்ளனர்.