கண்பார்வை குறைபாடுகளை இயற்கை முறையில் சரி செய்ய அரவிந்த் ஆசிரமத்துடன் இணைந்து ஆரோவில் தொடங்கப்பட்டுள்ளது.
கண் பார்வை குறைபாடுகளை இயற்கை முறையில் சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரோ பெர்பெக்ட் விஷன் என்ற ஒரு புதிய திட்டம் அரவிந்த் ஆசிரமத்துடன் இணைந்து ஆராவில்லில் தொடங்கி உள்ளது. ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி மற்றும் அரவிந்தர் ஆசிரமம் சந்தோஷ, மங்கள்தா ஆகியோர் முன்னிலையில் நேற்றைய தினம் இந்த திட்டம் ஆரோவில்லில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாரத் நிவாஸ் சார்பாக ஜன்மஜய் பங்கேற்றார்.
இந்தத் திட்டத்தை குறித்து ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்திரவி கூறியதாவது , இந்த திட்டமானது இப்பகுதி மக்கள் மற்றும் ஆரோவில்லுக்கு வரும் பார்வையாளருக்கு பெரிதும் உதவும் வகையில் இருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முக்கியமாக இந்த திட்டமானது கண் பார்வை குறைபாடுகளில் இயற்கை முறையில் சரி செய்ய உதவும் என்றார்.
இதையும் படிங்க: ஆரோவில்லில் முகாமிட்ட வெளிநாட்டினர்: 13 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆரோவிலில் ஆய்வு
திட்டத்தின் அம்சங்கள்:
இந்தத் திட்டத்தின் அம்சங்களை குறித்து ஆரோவில் ஆரோக்கிய நல மையத்தை நடத்தி வரும் வெங்கடேசன் கூறியதாவது கண் பார்வை குறைபாடுகளை தடுக்க மற்றும் சரி செய்ய கண் பயிற்சிகள், கண் மசாஜ், கண் சிகிச்சை முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படும். அதிலும் குறிப்பாக கிட்ட பார்வை போன்ற கண் பிரச்சனைகளை இயற்கையாகவே சரி செய்ய இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இன்றைய காலத்தில் கணினி மற்றும் மொபைல் போனின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளிடமும் கண் பார்வை குறைபாடு அதிகமாக காணப்படுகின்றன. எனவே அவற்றை தடுக்க தான் இந்த திட்டம் பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தான். இந்த திட்டத்தில் பங்கேற்கும் தனிநபர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கண்பார்வையை இயற்கையாக மேம்படுத்தும் வாய்ப்பை பெறலாம். மேலும் கண் பார்வை குறைபாடுகளை தடுக்கவும், சரி செய்யவும் இந்த திட்டம் ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரோவில் சைக்ளோதான்! 25 கி.மீ. சைக்கிள் ஒட்டி 7ம் வகுப்பு மாணவி யாழினி அசத்தல்!
இலவசமா?
தற்போது இந்தத் திட்டத்தின் சேவை அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல உள்ளூர் வாசிகளுக்கு அதிலும் குறிப்பாக ஏழ்மையாக இருப்பவர்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லுகின்றனர். மக்களிடம் வரவேற்பு கொடுத்து தான் ஆரோவில் அறக்கட்டளை அடுத்த கட்டமாக முழு இலவச சிகிச்சையை தர முடிவு எடுப்பார்கள் என்று ஆரோவில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
