கொரோனா பாதிப்பா..? சிகிச்சை செலவு "3.50 லட்சம்"..! இந்த விவரம் உங்களுக்கு தெரியுமா...?
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், வென்டிலேட்டர்கள் அல்லது பிற உயிர் காக்கும் சாதனங்களுடன் சிகிச்சை அளிக்கும் போது, ஒரு நாளைக்கு ரூ.20,000 மற்றும் ரூ .25,000 செலவாகிறது. அதாவது 14 நாட்களுக்கு 3.50 லட்சம் செலவிடப்பட்டது
கொரோனா பாதிப்பா..? சிகிச்சை செலவு "3.50 லட்சம்"..! இந்த விவரம் உங்களுக்கு தெரியுமா...?
இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 700 கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
நோயாளியின் வயது, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் விளைவுகளை பொறுத்து சிகிச்சைக்கான செலவு சற்று மாறுபடும். அந்த வகையில் ஒரு நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், வென்டிலேட்டர்கள் அல்லது பிற உயிர் காக்கும் சாதனங்களுடன் சிகிச்சை அளிக்கும் போது, ஒரு நாளைக்கு ரூ. 20,000 மற்றும் ரூ .25,000 செலவாகிறது. அதாவது 14 நாட்களுக்கு 3.50 லட்சம் செலவிடப்பட்டது
பொதுவாக ஒரு நோயாளியின் சிகிச்சை 14 நாட்கள் நீடிக்கும். அதன் படி கணக்கிட்டால், ரூ.2,80,000 முதல் 3,50,000 வரை செலவாகும். அதன் பின்னர் 3 முதல் 5 முறை டெஸ்ட் செய்து நெகட்டிக் வந்தால் மட்டுமே அந்த நபரை வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.
சோதனை செய்யும் டெஸ்ட் கிட் ரூ. 4500
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை அல்லது மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன. இதற்கான செலவு ரூ.4,500 ஆகும்.டெஸ்ட் கிட்டின் விலை 3000 ரூபாய் மட்டுமே.
ஒரு நபர் கொரோனா செய்த பின்னர், சிகிச்சை பெற தனி வார்டுக்கு செல்லும்போது, ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி குளியலறை உள்ளது. வேறு யாரும் அங்கு தங்க அனுமதிக்கப்படுவதில்லை. வெண்டிலேட்டர் உடன் சிகிச்சை அளித்தால் ஒரு நாளைக்கு 25,000 முதல் 50,000 வரை செலவிடப்படுகிறது.
பிபிஇ(PPE ) மற்றும் மருந்துக்காக செலவு ரூ.1000 சோதனை
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு முறை தங்கள் கிட்(பாதுகாப்பு கவசம்) மாற்ற வேண்டும். ஒரு பிபிஇ கிட் விலை ரூ.750 முதல் 1,000 வரை ஆகும். மற்ற மருந்துகளை வாங்க ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.1000 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.