"உங்கள் அனுதாபம் எனக்கு தேவை இல்லை"..!  குருப் 1 தேர்வில் வெற்றிபெற்ற ஸ்வப்னா  அதிரடி..! அடுத்து ஐ.ஏ.எஸ் தான் இலக்கு..!

தமிழக அரசு தேர்வாணையம் நடத்தக்கூடிய குரூப் தேர்வு எழுதி குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்வப்னா என்ற மதுரையை சேர்ந்த திருநங்கை.

மதுரை அலங்காநல்லூரில் பிறந்து வளர்ந்தவர் சிறுவயது முதலே படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஆனால் இவர் திருநங்கை என்பதால் பல இடங்களில் பல்வேறு வாய்ப்புகளை பெறமுடியாமல் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் படிப்பு ஒன்று மட்டுமே வாழ்க்கைக்கு துணை நிற்கும் என்பதை உணர்ந்த ஸ்வப்னா யாருடைய கேலிப் பேச்சிற்கும் ஆளாகாமல் எதனையும் கண்டு கொள்ளாமல் அடுத்த முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தார்.

அந்த வகையில் தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கு பெற கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த இவரது விண்ணப்பத்தை நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக உரிமைக்காக போராடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத திருநங்கைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம். இவருடைய முயற்சியால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்ற அனைத்து திருநங்கைகளும் தேர்வுகளில் பங்கு பெற பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்ற பெருமையும் தட்டிச் சென்றவர் என்பது குறிப்பிட தக்கது.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வை எழுதி, தற்போது வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வரும் சொப்னா மீண்டும் படிப்பின் மீது கொண்ட ஆர்வம் தொடர்பாக அடுத்த முயற்சி செய்து குரூப்-1 தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி தற்போது தரவரிசை பட்டியலில் 228 ஆவது இடத்தைப் பிடித்து பெரும் சாதனை படைத்து உள்ளார் தற்போது குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ள சொப்னா காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியோ அல்லது அதற்கு இணையான பதவியிலோ பணி செய்யக்கூடிய வாய்ப்பை பெற்று உள்ளார். மேலும் இதோடு நிறுத்தி விடாமல் ஐஏஎஸ் ஆவதற்கு முழு முயற்சி எடுப்பேன் என்றும் தன்னுடைய குடும்பம் அளித்த ஆதரவு காரணமாகவே இவ்வாறு சாதிக்க முடிந்தது என்றும் "என் மீது யார் யாருடைய அனுதாபமோ.. கருணையோ தேவையே கிடையாது. உங்களுடன் சரிசமமாக  போட்டி போடக்கூடிய உரிமையை திருநங்கைகளுக்கு வழங்கினாலே போதுமானது" என தெரிவித்து உள்ளார் ஸ்வப்னா.