சிசிடிவி ஆதாரத்துடன் உங்கள் வீட்டிற்கே வருது ஆப்பு..! போக்குவரத்து போலீசார் அதிரடி..! 

இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இருந்த  போதிலும் இன்றளவும் ஹெல்மெட் அணியாமல் ஒரு சிலர் செல்வதை பார்க்க முடிகிறது. கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து நடந்து வரும் பொது நல வழக்கில், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது..? ஏன் கட்டாய ஹெல்மெட் முறை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றெல்லாம் ஏற்கனவே நீதிபதிகள் போக்குவரத்து போலீசாருக்கு கேள்வி எழுப்பினர். 

இதற்கிடையில், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 மட்டுமே அபராத தொகை என்பதால். எளிதாக கட்டி விட்டு சென்று விடுகின்றனர் என்ற கோணத்திலும் பதில் தரப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அபராத  தொகை உயர்த்தி மிக விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களிடம் லைசன்ஸ் ரத்து செய்வது உள்ளிட்ட அனைத்து திட்டமும் விரைவில் அமலுக்கு வர  உள்ளது.

இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் வாய்மொழியாக கூறியதை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் வீட்டிற்கே வருகிறது அபராத கட்டண ரசீது. 

அதில், சிக்னல் மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் போடாமல் செல்வது என எதுவாக இருந்தாலும், ஆதாரத்துடன் சிசிடிவி கேமரா காட்சிகளுடன் வீட்டு விலாசம் போட்டு, வண்டி எண் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது. மேலும் எந்த காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்படுகிறது? எதற்காக அனுப்பப்படுகிறது...என்ற விவரம் வரை அனைத்தும் தெரிந்துகொள்ளலாம். எனவே மக்களே, போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் கவனமாக சென்று நாமும் பாதுகாப்பாக இருப்போம். மற்றவர்களையும் விதிமுறைகளை கடைபிடிக்க வைப்போம்.