touch your heart ans say this is true or not
உங்க மனச தொட்டு சொல்லுங்க பார்க்கலாம்.....உண்மையா? இல்லையா?
திருமண வாழ்க்கை ஜகஜோதியாக இருந்தால் அதைவிட ஒரு மகிழ்ச்சி வேறு இருக்க முடியாது ..அதே வேளையில் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் நரக வேதனை தான்..
சரி காதலிக்கும் போது இருக்ககூடிய மன நிலைமையும்,அதுவே திருமணம் செய்துகொண்ட பிறகு இருக்கும் மன நிலைமையும் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்
காதலிக்கும் போது மட்டும் தான் ரதியும், மன்மதனும்......
கல்யாணம் ஆகிவிட்டால் மூஞ்சியும், மொகறையும்....!!
கல்யாணத்துக்கு முன்னாடி மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும்...
கல்யாணத்துக்கு அப்பறம் தட்டுமுட்டு சாமான் தான் பறக்கும்....
திருமணத்துக்கு முன்
பெற்றோருக்குத் தெரியாமல் காதலியை சந்திப்பதும்,காதலி காதலனை சந்திப்பதும் இருக்கும்
திருமணத்துக்கு பின்
மனைவிக்குத் தெரியாமல் பெற்றோர்களுக்கு சில உதவி செய்வதும், கணவனுக்கு தெரியாமல் தாய்வீட்டிற்கு சில உதவி செய்வதும், தாய் வீட்டிற்கு சென்று சில நாட்கள் இருக்க விரும்புவதையும் பார்க்க முடியும்...
இது தாங்க வாழ்க்கை....இப்ப சொல்லுங்க....நம்மில் எத்தனை பேர் இது போன்ற அனுபவங்களை சந்தித்துஇருப்போம் அல்லவா.....
