ரிஸ்க் இல்லாமல் சேவிங்ஸ் பண்ணலாம்.. பக்காவா பணத்தை சேமிக்க சிறந்த 4 திட்டங்கள் - என்னென்ன? பார்க்கலாம் வாங்க!

Riskless Savings Scheme : எவ்வளவு தான் நாம் சம்பாரித்தலும், அதை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே நம்மால் நமது முதுமை காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்கமுடியும்.

Top 4 Best Savings Schemes without risk with high returns ans

கிசான் விகாஸ் பத்ரா

கிசான் விகாஸ் பத்ரா என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு முன்முயற்சியாகும். இது எந்தவித ஆபத்துக்களையும் வெளிப்படுத்தாமல் நிலையான, நீண்ட கால நிதி மூலோபாயத்தைத் தேடும் தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 10 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்யப்பட்ட தொகையை இரட்டிப்பாக்க உத்தரவாதம் அளிக்கிறது, தற்போது 7.5% வட்டி விகிதத்துடன் இந்த திட்டம் செயல்பட்டு வருகின்றது. 

வருமான வரி தாக்கல் செய்ய போவதற்கு முன்.. கொஞ்சம் கவனியுங்க.. இந்த ஆவணங்கள் எல்லாம் ரெடி பண்ணுங்க..

தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் 

வங்கிகளில் வழங்குவதை போலவே Fixed Deposit வடிவிலான சேமிப்புகளை வழங்கும் ஒரு திட்டம் தான் தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம். ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்கலாம். இதில் அளிக்கப்படும் வட்டி விகிதத்தை பின்வருமாறு காணலாம். 

1 வருட டெபாசிட் செய்யும்போது - 6.9 வட்டி 
2 வருட டெபாசிட் செய்யும்போது - 7.0 வட்டி
3 வருட டெபாசிட் செய்யும்போது - 7.1 வட்டி
5 வருட டெபாசிட் செய்யும்போது - 7.5 வட்டி கிடைக்கும், ஆனால் இதில் 5 வருட டெபாசிட் செய்யும்போது மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். 

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் 

தபால் நிலையத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்து இந்த திட்டத்தில் இணையலாம். ஆனால் 5 ஆண்டுகள் வரை லாக் இன் வருடமாக இந்த திட்டத்தில் இருக்கும். தனி நபர் கணக்கை துவங்கும்போது அதிகபட்சம் 9 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்யமுடியும். ஜாயிண்ட் கணக்காக துவங்கும்போது 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஆனால் இந்த திட்டத்தில் வரி விலக்கு கிடைக்காது. 7.4 சதவிகிதம் வரை இதில் வட்டி கிடைக்கும்.

மகிளா சம்மன் பத்திரம்

இந்த திட்டத்தின் லாக் இன் காலம் 2 ஆண்டுகள் தான், ஆகவே இது குறைந்த கால சேமிப்பு திட்டமாகும். பெண்களுக்கான ஒரு முதலீடு பத்திர திட்டம் தான் இது. இதில் 7.5 வரை வட்டி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆண்டுக்கு 559 ரூ செலுத்தினால் போதும்.. 15 லட்சம் வரை விபத்து காப்பீடு - அஞ்சல் துறை திட்டம் - எப்படி இணைவது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios