ஆண்டுக்கு 559 ரூ செலுத்தினால் போதும்.. 15 லட்சம் வரை விபத்து காப்பீடு - அஞ்சல் துறை திட்டம் - எப்படி இணைவது?

Post Office Scheme : அஞ்சலகத்தை பொறுத்தவரை அதிக அளவில் வட்டி தரும் பல நல்ல திட்டங்கள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

more benefits in less yearly premium post office accident insurance scheme full details ans

அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி" (Indian Post Payment Bank), நாட்டில் உள்ள பல பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூபாய் 520, 559 மற்றும் 799 என்ற குறைவான பீரீமியத்தில், ரூபாய் 10 லட்சம் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய போவதற்கு முன்.. கொஞ்சம் கவனியுங்க.. இந்த ஆவணங்கள் எல்லாம் ரெடி பண்ணுங்க..

இந்த புதிய காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள மற்றும் முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித ஆதாரங்களுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி , வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? 

ரூ.10 லட்சம் அல்லது 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்). ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி. தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி. விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை அளிக்கப்படும்.

மேலும் விபத்தினால் மரணம் / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.100000 வரை அளிக்கப்படும். விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.100000 வரை அளிக்கப்படும். விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 60 நாட்களுக்கு வழங்கப்படும்.

மேலும் பாலிசி போட்டவர் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.9000 வரை அளிக்கப்படும். ஆண்டிற்கு வெறும் ரூ.520, 559, 799-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பலரும் உடனே இதில் இணைந்து பயன்பெறுமாறு இந்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு 100 டன் தங்கத்தை மாற்றியது இந்திய ரிசர்வ் வங்கி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios