Asianet News TamilAsianet News Tamil

உஷார்..! குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் "டூத்பேஸ்ட்" பற்றி தெரியுமா...?

tooth paste is developing cancer
tooth paste is developing cancer
Author
First Published Jun 1, 2018, 2:36 PM IST


உஷார்...குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் "டூத்பேஸ்ட்" பற்றி தெரியுமா...?

எதை செய்கிறோமோ இலையோ.. காலை எழுந்தவுடன், முதலில் பல்லை துலக்குவது தான்  பழக்கம்...

ஆரம்ப  காலக்கட்டத்தில், கரித்தூள் செங்கல் தூள், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி கொண்டு பற்களை சுத்தம் செய்தனர்...

ஆனால் இப்ப....நீங்கள் பயன்படுத்தக் கூடிய டூத் பேஸ்டில் உப்பு இருக்கா ? என  கேட்கிறார்கள்....முன்பெல்லாம்  உப்பு போட்டு  தான்  வாய்  கொப்பளிப்பார்கள்....

சரி  இதெல்லாம்  ஒருபக்கம் இருக்க, தினமும் ஒவ்வொரு புதிய வகையான டூத் பேஸ்ட் வெளிவருகிறது.

அதில் ‘டிரைகுளோசன்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ரசாயன பொருள் உள்ளது. இவை பார் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பாக்டீரியாவை கட்டுப்படுத்துவதால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக  ஒரு ஆய்வும்  செய்யப்பட்டு  உள்ளது.  அதன்படி டிரைகுளோசன் ரசாயனத்தை எலிகளின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.

tooth paste is developing cancer

அப்போது எலிகளுக்கு பெருங்குடல் புற்று நோய் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைகுளோசன் ரசாயனம் பெருங்குடலில் சுழற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கி அதன் மூலம் புற்றுநோயாக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது.

tooth paste is developing cancer

‘டிரைகுளோசன்’ என்ற ரசாயன பொருள்  பொதுவாகவே ஏராளனமான டூத் பேஸ்டில்  பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மிக குறைந்த அளவில் அதனை பயன்படுத்திக்கொண்டு இயற்கையான முறையில் நம் முன்னோர்கள் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முறையை மேற்கொள்வது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios