என்ன ஒரு கொடுமை..! தக்காளியை வாங்க யாரும் வராததால் ஏரியில் கொட்டி கண்ணீர் சிந்தும் விவசாய பெருமக்கள்..! 

தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதாலும், யாரும் வாங்க முன்வராததாலும் ஏரியில் கொட்டி சென்றுள்ளனர் விவசாயிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போச்சம்பள்ளி, அரசம்பட்டி, செல்லம்பட்டி என பல பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். சென்ற மாதம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக இந்த வெவ்வேறு கிராமங்களிலிருந்து பெருமளவிற்கு தக்காளியை கொள்முதல் செய்து அங்கிருந்து மதுரை சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி அனுப்பப்பட்டது.

ஆனால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போது வியாபாரிகள் தக்காளியை வாங்க மறுத்து உள்ளனர். இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் ட்ராக்டர், டெம்போ மூலம் அதிகப்படியான விளைச்சல் கொண்ட தக்காளியைக் கொண்டு வந்து ஏரியில் கொட்டி சென்றுள்ளனர். மேலும் ஒரு சில தோட்டங்களில் அறுவடை செய்யாமலேயே கால் நடைகளுக்கு உணவாக விட்டுவிட்டனர். அதேபோன்று முள்ளங்கி வியாபாரிகள் முள்ளங்கியை பறிக்காமல் அந்த நிலத்திற்கே உரமாக இருக்க ஏர் ஓட்டி   உள்ளனர்.