தலைகீழாக மாறிய டோல்கேட் நிலைமை..! கவுத்துடுச்சே கொரோனா..! 

பம்பரம் போன்று சுழன்று ஓடிகிட்டே இருந்த நம் வாழ்க்கையில் பெரும் பிரேக் கொடுத்து உள்ளது கொரோனா. இன்று உலகம் முழுவதும் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 4,23,142  பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். சிகிச்சை பெற்றவர்களில்1,09,145 பேர் குணாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் கடை பிடிக்கப்படுவதால், அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கலெக்ஸன் முழுமையாக குறைந்தே விட்டது.

இந்தியா முழுவதும் தற்போது பாஸ்ட்டேக் மூலமாகவே கிட்டத்தட்ட 70 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று பாஸ்ட்டேக்குகள் மூலமாக 33.12 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முந்தைய ஞாயிற்று கிழமையுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத சரிவாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் தினமும் சராசரியாக வசூலாகும் தொகை 85 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது எத்தனையோ சமயங்களில் டோல் கேட்டில் அதிக பணம் வசூலிக்க படுகிறது என்றும், சிட்டியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வரவே டோல்கேட்டுக்கு பணம் கொடுத்தே சமாளிக்க முடியவில்லை என  பலரும் புலம்வி வந்ததை பார்க்க முடிகிறது. இந்த ஒரு தருணத்தில் கொரோனா நிலைமை இப்படி இருக்க கொரோனா நிலைமை சரியாகும் வரை டோல்கேட் பக்கம் போக வண்டியே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது