சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படவாய்ப்பே இல்லை.அதன் படி சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி  தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. இருந்த போதிலும் செய்கூலி, சேதாரம்,ஜி எஸ் டி என பார்க்கும் போது  ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் 30 ஆயிரத்தை கடந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 18 குறைந்து 3345 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து  26 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து ரூ.44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.