மேஷ ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும் நாள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். வீடு வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

கடந்த கால இனிமையான பல சம்பவங்களை நினைத்து பார்ப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தினர் உங்களிடம் சில சச்சரவுகளை ஏற்படுத்துவார்கள்.மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தில் கலகலப்பாக காணப்படும். பாதியில் நின்ற வேலைகள் விரைவாக முடியும். புதிய நண்பர்களுடன் கோவில்களுக்கு சென்று மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

சிலரின் விமர்சனங்களை மனதில் போட்டுக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளிடம் அன்பாக இருங்கள். பண விஷயத்தில் சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கக்கூடிய திறன் உங்களுக்கு இருக்கும். திடீரென பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்மராசி நேயர்களே..!

பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ள முற்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பல்வேறு சாதனைகளை செய்ய கூடிய சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

மற்றவர்களை நம்பி எக்காரணத்தைக் கொண்டும் வேலையை ஒப்படைக்கக்கூடாது. உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மகிழ  கூடிய நாள் இது.

விருச்சக ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண பரிமாற்றம் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள்.தனுசு ராசி நேயர்களே..!

துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும். மனதிற்கு இதமான சில விஷயங்களை செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து அனைவரிடமும் பேச வேண்டாம். உறவினர்கள் நண்பர்களால் அனாவசிய செலவுகள் உங்களுக்கு ஏற்படும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேச வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது எப்போதும் கவனமாக செல்வது நல்லது.