Today gold price in Chennai for 24 karat and 22 karat gold

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படியே விற்பனையும் செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.2,891 எனவும், 1 சவரன் ரூ.23,128 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,036 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.