today 8 pm we need to do prayer for vairavar

இன்று (ஜூன் 6 ) இரவு 8 மணிக்கு செய்ய வேண்டிய மிக முக்கிய வழிபாடு...மீண்டும் கிடைக்காத நாள்.....8லட்சுமியும் குடியேறும் முக்கிய தினம்...

தேய்பிறை அஷ்டமி இன்று ...

சுவர்ண ஆகருஷ்ண வைரவருக்கு உகந்த நாள்

வாழ்வில் உள்ள தடைகள் குறைகள் நீங்கி செல்வ செழிப்போடு வாழ மிகவும் உகந்த நாள் இன்று...நாம் இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய வழிபாடு பற்றி பார்க்கலாம்

வாழ்வில் நல்ல மாற்றம் வர....இன்று என்ன செய்ய வேண்டும்..?

பூசணிக்காய் வழிபாடு

மிகவும் உன்னதமான வழிபாடு....

மனிதன் உடலில், மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் தான் உள்ளது அதே போன்று பூசணிக்காயில் மூன்று மடங்கு நீர் உள்ளது.....

இதனை பாதியாக வெட்டி, விதையை எடுத்துவிட்டு, தண்ணீரால் கழுவி, திருநீர் சந்தனம் , மஞ்சள் குங்குமத்தை வைத்து அலங்காரம் செய்து பின்னர் அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி..சிகப்பு கலர் துணியால் 27 மிளகு வைத்து விளக்கேற்றி......வைரவருக்கு ஆராதனை செய்ய வேண்டும். இதனை அருகில் உள்ள வைரவர் கோவில்களில் செய்வது நல்லது.. வீட்டில் செய்ய கூடாது...

வைரவர் உள்ள கோவில்களில் சென்று செய்ய முடியாதவர்கள்..வீட்டில் அமர்ந்தபடியே வைரவருக்கு உகந்த மந்திரத்தை சொல்லலாம்....

மந்திரம்

"தனம் தரும் வைரவர் தளரடி பணிந்திடின்...தளர்வுகள் தீர்ந்து விடும்...மனம் திறந்தவன் பாதம்....மலரிட்டுவாழ்த்திடின்...மகிழ்வுகள் வந்து விடும்...சினம் தவிர் தன்மையும்...சின்மைய புன்னகை...சிந்தையுள் ஏற்றவனே....தனக்கில்லை ஈடு...யாருமே என்பால்..தனமழை பெய்துடுவான்...."

இரவு 8 மணிக்கு

இந்த சுவர்ண ஆகருஷ்ண அகஷ்டகத்தை....8 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்...

இன்று இரவு எட்டு மணிக்கு...8 முறை இந்த மந்திரத்தை தேய் பிறைஅஸ்டமியான இன்று இதனை செய்யலாம்..இவ்வாறு இந்த மந்திரத்தை தேய்பிறை அஷ்டமியான இன்று சொல்லி வணங்கினால் 27 நட்சத்திரங்களையும் 12  ராசிகளையும், அஷ்ட லட்சுமியையும் வழிப்படுவதற்கு சமம் என்பது ஐதீகம்.

இந்த மந்திரத்தை வைரவருகாக இன்று செய்தால், அஷ்ட லட்சுமி 8 பேரும் இன்று அவருக்குள் குடி இருப்பார்கள் என்று ஐதீகமாம்....