Asianet News TamilAsianet News Tamil

பணம் பொருள் வந்து சேர தினமும் இதை பண்ணுங்க..! வேண்டாம்னா விடுங்க ..!

தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு உள்ளங்கை, மனைவி குழந்தைகள் 
 
to get money and gold we need to follow some ideas in home
Author
Chennai, First Published Apr 19, 2019, 6:56 PM IST

தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு உள்ளங்கை, மனைவி குழந்தைகள் 

வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் இருக்கும்.

to get money and gold we need to follow some ideas in home

வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. அது இறை சக்தியை குறைத்து விடும். ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாமல் போகும்.

சிவன் பார்வதி விநாயகர் முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால் அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள் கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.

to get money and gold we need to follow some ideas in home

அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்வது ஆக சிறந்தது. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது, அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. பொதுவாகவே நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்தல் கூடவே கூடாது. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொறியக்கூடாது.

மேற்குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து வந்தாலே நம் வீட்டில் செல்வம் தங்குமாம். இல்லை என்றால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாத குறைதானாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios