இன்ப அதிர்ச்சி..! "ஒரு லட்சம்" வரை..."தங்க நகை கடன்" குறித்து கூட்டுறவு வங்கி அதிரடி அறிவிப்பு..! 

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார பாதிப்புக்குள்ளாகி, ஏழை எளிய மக்கள் கையில் பணம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த ஒரு நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு நகைக் கடன் திட்டத்தை தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (TNSC) அறிமுகப்படுத்தியுள்ளது 

இதன் மூலம் குறைந்தபட்ச கடனாக 25 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் சிறப்பம்சமாக இந்த திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றிக்கான நகை மதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள நகைக் கடன் திட்டத்தை விட10 சதவீத அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளதால் மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 

திட்டம் பலன் 

கிராம் ஒன்றுக்கு 3,300 ரூபாய் வரை கடன் வழங்கப்படும். பணம் தேவைப்படுவோர் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் 47 கிளைகளிலும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த கடன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமின்றி அவசர ஆத்திரத்திற்கு கூட செல்ல முடியாமல் மக்களும் பெரும் இன்னல் பட்டு வருகின்றனர். இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவி தொகையும், ரேஷன்  அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களும் ரூ.1000 உதவி தொகையும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியும் தங்க நகை கடன் மீதான சிறப்பு சலுகை அறிவித்து உள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.