தமிழக அரசால் நடத்தப்படும் TNPSC  group - 4 காண காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த ஒரு நல்ல வாய்ப்பை பயனப்டுத்திக்கொள்ளலாம். 

அதன் படி,   

விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  அரசு  வேலை வாங்கி தருவதாக யாரேனும் கூறினால், இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அறிவிக்கப்பட்டு உள்ள காலி இடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முழு விவரம் தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க...