Asianet News TamilAsianet News Tamil

TNPSC தேர்வு இனி இப்படித்தான்..! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNPSC exam will be very  strict with cctv camera  along with  mobile jamar says minister jayakumar
Author
Chennai, First Published Mar 17, 2020, 6:00 PM IST

TNPSC தேர்வு இனி இப்படித்தான்..! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..! 

அனைத்து TNPSC தேர்வு மையங்களிலும் விரல் ரேகை பதிவு இயந்திரங்கள், மொபைல் ஜாமர், கருவிகள் பொருத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதில் மாற்றம் கொண்டுவரும் பொருட்டு மேலும் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கும் அனைத்து தேர்வு மையங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு, மொபைல் ஜாமர் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தேர்வு எழுதும் போது சில நிமிடங்கள் மட்டுமே வீடியோ எடுக்கப்பட்டு வந்தது. 

TNPSC exam will be very  strict with cctv camera  along with  mobile jamar says minister jayakumar

ஆனால் இப்போது தேர்வு எழுதக்கூடிய இரண்டரை மணி நேரமும் முழுமையாக வீடியோ பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் பிரதமர், முதல்வர் என மிக முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மட்டுமே மொபைல் ஜாமர் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொபைல் ஜாமர் வைப்பது இதுவே முதல் முறை. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

TNPSC exam will be very  strict with cctv camera  along with  mobile jamar says minister jayakumar

இதன் மூலம் இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் யாரும் ஈடுபட முடியாது என்பதை உறுதி செய்யும் விதமாக இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios