திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ஒருநாளில், ரூ.2.22 கோடி கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ஒருநாளில், ரூ.2.22 கோடி கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நேற்று நடந்தது. ரதசப்தமியையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் அருள்பாலித்தார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற ரதசப்தமி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருப்பதியில் நேற்று முன்தினம் 30,172 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 10,829 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். இதில், நேற்று முன்தினம் மட்டும் ரூ.2.22 கோடி உண்டியல்காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது.

இதை தொடர்ந்து சின்ன சே‌ஷ வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் கோவிலுக்குள்ளேயே கல்யாண உற்சவ மண்டபம் அருகே எழுந்தருளினார்.

கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும்.

ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.