முகத்தில் மேக்கப் போடுவதற்கு முன்பு சருமத்தை தயார் செய்யும் வழிமுறைகள்..!!

பொதுவாக மேக்கப் போட்டுக்கொள்வதற்கும், அதற்கான பொருட்கள் மீதும் நிறைய பேருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் மேக்கப் மீதான புரிதல் பலருக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். தொழில்ரீதியாக ஒப்பனைக் கலைஞர்களாக இருப்பவர்கள் கூட, பல வருட அனுபவத்துக்கு பிறகு தான் மேக்கப் குறித்து புரிதலுக்கு வருகின்றனர். எதுபோன்ற சருமத்துக்கு எப்படிப்பட்ட மேக்கப் போட வேண்டும்? சருமத்துக்கு சிறந்த முறையில் எந்த மேக்கப் பொருந்தும்? மேக்கப் போட்டுவதற்கு முன்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளை எப்படி தயார் செய்ய வேண்டும்? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான பதில் அனுபவத்துக்கு பிறகு தான் நமக்கு கிடைக்கிறது. இந்நிலையில் சரும நிபுணர்கள் பல்வேறு தளங்களில் மேக்கப் குறித்து வெளியிட்டு கருத்துக்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

tips to prepare your sking before applying make up

முதலில் சருமத்தை கிளன்சிங் செய்யுங்கள்

எப்போதும் மேக்கப் போடுவதற்கு முன்பு, உங்களுடைய சருமத்துக்கு ஏற்ற வகையிலான கிளன்சிங்கை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். கிளன்சிங் கொண்டு முகத்தை கழுவுவதன் மூலம், சருமம் சுத்தமாகும். எப்போதும் கிளென்சிங்கை மெதுவாகத்தான் செய்ய வேண்டும். அவசர அவசரமாக செய்தால், சருமம் வறண்டு போகும். கிளன்சிங்க் செய்து முகம் சுத்தமானவுடன், சிறிது நேரம் உலர விடுங்கள். அதையடுத்து மேக்கப் போடுங்கள்.

இறந்த செல்களை அகற்றிடுங்கள்

நீங்கள் மேக்கப் போட்டால், அது வறண்ட சருமத்தின் திட்டுகளை மட்டுமே வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதனால் இறந்த சருமத்தின் செல்களை அகற்றிட எக்ஸ்ஃபோலியேஷன் என்கிற முறையை மேற்கொள்ள வேண்டும். இதன்காரணமாக உங்களுடைய முகத்திற்கு மென்மையான மேற்பரப்பு கிடைக்கிறது. இதனால் சருமத்தின் மீது எளிதாக மேக்கப்பை பயன்படுத்த முடியும். நீங்கள் உதட்டுக்கு மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாக இருந்தால், உதடுகளுக்கும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்ய மறக்காதீர்கள்.

உங்களுடைய விரல் நகங்கள் இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.!!

சருமத்தின் துளைகளை சுருக்கும் டோனர்

மேக்கப் போடும் போது, அது சருமத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடக் கூடாது என்கிற நோக்கில் தான் டோனர் போடப்படுகிறது. இதனால் முகத்தில் இருக்கும் துளைகள் சுருங்கி சருமம் மென்மையாகி விடுகிறது. டோனிங் செய்வதற்கு குளிர்ச்சியான தண்ணீரும் ஏற்புடையதாக இருக்கும். முக சருமத்தை இது சுருக்கிவிடுவதால், அப்பகுதி முழுவதும் மிருதுவாகி விடுகிறது. இதனால் மேக்கப் போடுவது எளிதாகிவிடுகிறது. நீங்கள் சிறந்த பிராண்டு கொண்ட டோனர் வாங்குவது மிகவும் முக்கியம்.

அசைவ உணவை தவிர்க்க எண்ணம் இருந்தும் ஆசை விடவில்லையா? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

மேக்கப்பை மெருகூட்டும் மாய்ஸ்சரைசர்

உங்களுக்கு சொன்ன பேச்சைக் கேட்டும் சருமம் கிடைக்கவில்லை என்றால், அதை வழிக்கு கொண்டுவர உதவுவது தான் மாய்ஸ்சரைசர். சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது, மேக்கப் போட்டால் அது எடுப்பாக இருக்கும். மேலும் உங்களுடைய முகம் நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்கவும் மாய்ஸ்சரைசர் பயன்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு அதிகமாக எண்ணெய் வழியும் என்றால், அதை கட்டுப்படுத்துவதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்ல முயற்சியாகும். 

சன்ஸ்கிரீன் லோஷனின் பயன்பாடு

அதிக நேரம் வெயிலில் சுற்றக்கூடிய நபராக இருந்தால் சன்ஸ்கிரீன் அல்லது லோஷன் க்ரீமை பயன்படுத்துவது நன்மையை தரும். இதனால் முகத்தில் இருந்து வழியும் எண்ணெய் கட்டுப்படுத்தப்படும். எனினும் சிலருக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினாலும், வெளியில் சுத்துவதால் சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படுகிறது. அதை சரிசெய்ய அவ்வப்போது டிஷூ பேப்பரை கொண்டு முகத்தை துடைந்து வருவது சரியாக இருக்கும்.

தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; தீமைகள்- ஒரு அலசல்..!!

மேக்கப்பை நீண்ட நேரம் தக்கவைக்கும் பிரைமர்

இன்றைய காலத்தில் ஒருவர் மேக்கப் போடும் போது, தனது முகத்தில் நீண்ட நேரம் அது இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் பொருந்தும். அதற்கு பிரைமரை பயன்படுத்துவது நல்ல பலனை தருவதாக இருக்கும். தரமான பிரைமரை பயன்படுத்துவதன் மூலம் சருமம் நன்கு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இதனால் உங்களுடைய மேக்கப் அதிக நேரம் முகத்தில் கலையாமல் இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios