Asianet News TamilAsianet News Tamil

இப்படி செய்யுங்க..!! இனிமேல் உங்க FREEZER-ல் ஐஸ் கட்டிகள் பிடிக்கவே பிடிக்காது..!!

ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பலருக்கு, ஃப்ரீசரை பராமரிப்பது குறித்து பெரியளவில் புரிதல் இல்லை. இதனால் ஃப்ரீசருக்குள் சுரக்கும் நீர் முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக உறைபனியாக மாறிவிடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், ஃப்ரீசரை திறப்பதற்கும், அதனுள் பொருட்களை வைப்பது பெரும் பிரச்னையாகி விடும். தற்போது ஃப்ரிட்ஜ்கள் நவீனமாக விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்போது விற்பனை செய்யப்படும் ஃப்ரிட்ஜ்களில் இடம்பெற்றுள்ள ஃப்ரீசரில் உறைபனி ஏற்படாது. ஆனால் நம் நாட்டில் இன்னும் பலர் பழைய முறை ஃப்ரிட்ஜ்களை தான் அதிகம் வைத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ஃப்ரீசர் தொடர்பான பிரச்னைக்கு தீர்வளிக்கும் நோக்குடன் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஃப்ரீசரை நீங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்றால், விரைவாகவே அதை ஃப்ரிட்ஜின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும்.  இதை தடுப்பதற்கு ஃப்ரிட்ஜுடன் சேர்த்து நீங்கள் ஃப்ரீசரையும் முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். 

tips to fix ice build up in your freezer
Author
First Published Sep 22, 2022, 1:10 PM IST

சூடான பொருள் கூடாது

எப்போதும் ஃப்ரீசருக்குள் சூடான அல்லது வெதுவெதுப்பான பொருட்களை உள்ளே வைக்கக்கூடாது. இதனால் ஃப்ரீசர் சராசரி நிலையில் இருந்து கூடுதல் ஆற்றலுடன் இயங்க வேண்டியது வரும். ஃப்ரீசர் அதிக வெப்பநிலையில் அல்லது அளவுக்கு மிஞ்சிய குளிர்த்தன்மையுடன் இயங்கினால், உறைபனி ஏற்படத் துவங்கும். அதேபோன்று ஃப்ரீசருக்குள் எப்போதும் அதிகமான பொருட்களை வைக்கக்கூடாது. இதுவும் ஃப்ரீசர் பெட்டியை அதிக ஆற்றலுடன் இயங்குவதற்கு தூண்டும். ஃப்ரீசரின் தட்பவெட்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டால், நாளிடைவில் அது ஃப்ரிட்ஜின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும்.

ஈரப்பதத்தை தவிருங்கள்

ஒரு பொருளை ஃப்ரீசருக்குள் வைப்பதற்கு முன்பாக, அதில் தண்ணீரில்லாமல் மற்றும் ஈரப்பதமற்று இருப்பதுபோல பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை, ஏதாவது ஒரு பொருளை நீங்கள் ஃப்ரிட்ஜிக்குள் வைப்பதற்கு முன்பு, அதை முற்றிலும் காயவைத்து அறை தட்பவெட்ப நிலையில் ஃப்ரீசருக்குள் வையுங்கள். அதேபோன்று ஃப்ரீசரை அதிகமாக திறந்துவிட வேண்டாம். மேலும், நீண்ட நேரம் திறந்து வைக்கவும் கூடாது. இது ஃப்ரிட்ஜின் மோட்டாரை சராசரி நிலையை விடவும் அதிகமாக இயக்குவதற்கு தூண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம், ஃப்ரீசருக்குள் உறைபனி உருவாகாது. 

அடிக்கடி தசை வலி, உடல் சோர்வு ஏற்படுகிறதா? உஷார்... மெக்னீஷியம் குறைபாடாக இருக்கலாம்..!!

வாரம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்

முடிந்தவரை வாரம் ஒருமுறை ஃப்ரிட்ஜை அனைத்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். இதனால் ஃப்ரீசருக்குள் உருவான உறைபனி உருகி, தண்ணீராக வெளியே வந்துவிடும். அதையடுத்து, சோப் கொண்டு ஃப்ரீசரை சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுங்கள். அதேபோன்று ஃப்ரீசருக்குள் ஒரு பொருளை வைக்கும் போதோ அல்லது வெளியில் எடுக்கும் போதோ, அதனுடைய தட்பவெட்ப நிலையை மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுவும் சீக்கரம் ஃப்ரீசருக்குள் உறைபனி ஏற்படுவது தடுக்கப்படும்.

உப்பு வைத்து துடையுங்கள்

முதலில் சோப்பு போட்டு ஃப்ரீச்ரை சுத்தம் செய்து விடவும். அதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து, அதில் சிறிதளவு உப்பு போட்டு ஃப்ரீசருக்குள் வைத்துவிடவும். இதனால் உறைபனி உருவாவது தடுக்கப்படும். மேலும் துணையை உப்பு தண்ணீரில் நினைத்து, ஃப்ரீசரை துடைத்து வருவதும் உறைபனி ஏற்படாமல் இருக்கும். பழங்கால முறையில் ஐஸ் பொருட்களை பதப்படுத்த இந்த முறையை பயன்படுத்தி வந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios