Asianet News TamilAsianet News Tamil

இனி "கை ரேகை" வைத்தால் தான் வாட்ஸ் அப் குரூப்பில் மெசேஜ் அனுப்ப முடியும்..!

Whatsapp குரூப்பில் தவறான செய்தியை பரப்புவதை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. 

thumb impression in required for wats app message
Author
Chennai, First Published Jun 22, 2019, 4:21 PM IST

இனி "கை ரேகை" வைத்தால் தான் வாட்ஸ் அப் குரூப்பில் மெசேஜ் அனுப்ப முடியும்..! 

Whatsapp குரூப்பில் தவறான செய்தியை பரப்புவதை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இது போன்ற வதந்திகளை பரப்பாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு வசதி கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை வைத்துள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் ஒவ்வொரு குரூப்பில்  வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதற்கும் டிஜிட்டல் கைரேகை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

thumb impression in required for wats app message

தற்போது வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பிய ஒரு மெசேஜை டெலிட் செய்ய அல்லது திருத்தம் செய்ய ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தவறான தகவல் அனுப்பப்பட்டாலோ அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ உடனடியாக செய்ய முடிகிறது. இந்த நிலையில் advanced முறையில், யார்? எந்த மெசேஜை, எப்போது... எந்த நேரத்தில்... எந்த குரூப்பில்...அனுப்பி உள்ளார்கள் என்பதையும், அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பதையும் மிக எளிதாக கண்காணிக்க முடியும், ஒருவர் அனுப்பும் தகவலை அனைவராலும் கண்காணிக்க முடியாது.

thumb impression in required for wats app message

அதே வெளியில், வதந்தியை கிளப்பும் வண்ணம் ஏதாவது தவறுதலாக மெசேஜ் அனுப்பி இருந்தால் சட்டம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும். எனவே  இனி வருங்காலங்களில் whatsapp மெசேஜ் மூலம் தவறான கருத்துக்கள் பரவுவதை தவிர்க்க முடியும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை நாம் இப்போது உணர்ந்து கொளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios