துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..!

துலாம் ராசி நேயர்களே..!

உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். 

விருச்சக ராசி நேயர்களே..! 

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கடனை தீர்க்க புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அதிக அளவு உணவு வகைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

தனுசு ராசி நேயர்களே..!

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசுங்கள். காணாமல் போன சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே..!

உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பண வரவு அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வந்தாலும் சமாளிக்கலாம். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.