துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!  

துலாம் ராசி நேயர்களே..!

தவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விருந்தினர் வருகை எப்போதும் உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே...!

எதிர்பாராத வகையில் உங்களுக்கு பணம் வந்து சேரும். பங்கு வர்த்தக மூலமாகவும் ஆதாயம் கிடைக்கும். மனைவி ஆதரவாகப் பேசுவார்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீரமைத்து பயன்படுத்த முயற்சி செய்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுடைய தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் பிரபல மாணவர்களுடன் நட்பு ஏற்படும். யோகா தியானம் போன்றவற்றை செய்து வந்தால் உங்கள் மனம் அமைதி நிலையை அடையும்.

கும்ப ராசி நேயர்களே...!

இரவுப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவது ஆகச்சிறந்தது.

மீனராசி நேயர்களே..! 

உங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டு.