துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

நண்பர்களின் ஆதரவு கூடும். பொது வாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

வருமானம் உயரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் பலன் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பொது வாழ்க்கையில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது சிறந்தது.

கும்ப ராசி நேயர்களே..!

நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 

மீனராசி நேயர்களே...!

சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வசதி வாய்ப்பு உயரும்.