துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தடைகள் பல வந்தாலும் தளராமல் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்கள் திறமை மீது அவ்வப்போது உங்களுக்கு சந்தேகம் வந்து ஒருபடி கீழே தள்ளும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் சிறிது கஷ்டப்படுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்டு மனம் வேதனை கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே....!

நீண்ட பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு விவகாரங்களில் எளிதில் முடியும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

பல எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்க கூடிய நாள் இது.  பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

கடன் பிரச்சினைகள் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கிடைக்கும். உங்களது வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வரலாம்.

மீனராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை எவ்வித தடையுமின்றி நிறைவேற்றும் நாள்.  பல தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.