துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே..!

எளிதாக செய்யக்கூடிய காரியங்கள் கூட போராடி முடிக்க வேண்டிய நாள். உங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் வரக்கூடிய நாட்களில் ஏற்படும்.

விருச்சக ராசி நேயர்களே...!

நந்தி பெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உங்களை வந்தடையும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் உங்களிடம் வந்து பேசுவார்கள். ஆடை ஆபரண பொருட்கள் வாங்குவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தடைகள் விலகி செல்லும் நாள். தனவரவு போதுமானதாக இருக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உறவினர் ஒத்துழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

மகர ராசி நேயர்களே...!

கனிவான பேச்சால் காரியங்களை சாதித்துக் காட்டும் திறமையான நீங்கள், இதுநாள் வரை இருந்து வந்த கடன்சுமை மெல்ல மெல்ல குறைய தொடங்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.

கும்ப ராசி நேயர்களே..!

உங்களுடைய விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெரிய விஐபிக்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிடலாம். 

மீன ராசி நேயர்களே...! 

வருமானம் இருமடங்காக பெருக வாய்ப்பு கிட்டும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு வந்து சேரலாம். இன்று திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.