துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறமை பெற்றவர்கள் நீங்கள். பயணங்களால் அதிக பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரி எதிர்ப்புக்கு ஆளாக நேரிடலாம்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் வரக்கூடிய நாள். இது வரை நீண்ட இழுபறியாக இருந்து வந்த வேலைகள் விரைவில் முடிப்பீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். பழைய நண்பர் ஒருவர் உங்களை வந்து சந்திக்க நேரிடலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

வீடு இடம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவு நல்ல முறையில் முடியும். பிறருக்காக உதவி செய்ய முற்படுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

செல்வம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டு. பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நல்ல தகவல் உங்கள் வீட்டை வந்தடையும்.

கும்ப ராசி நேயர்களே..!

உங்களுக்கு யோகமான நாள் இது. அதிக செலவு செய்யக்கூடிய விஷயங்கள் நடக்கலாம். வீட்டில் இருப்பவர்களிடம் அணுசரித்து விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மீனராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றி கொள்ளும் நாள் இது. கொடுக்கல் வாங்கல் மூலம்  ஏற்பட்ட குழப்பங்கள் மறைந்துவிடும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலையை போதுமான அளவு இருக்கும்.