துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

துலாம் ராசி நேயர்களே...!

யோசித்து செயல்பட வேண்டிய நாள் இது. நட்பு கூட பகையாகும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலைகள் முடியாமல் சில நாட்கள் தள்ளிப் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே..!

உங்களது ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். உங்களது முயற்சியின் பேரில் பல விஷயங்கள் கைகூடும். உத்தியோக மாற்றம் குறித்து சிந்தனை உங்களுக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அவர் சிரித்து வாழுங்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

எடுத்த காரியம் நன்கு முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்யும் நாள் இது. மகர ராசி நேயர்களே உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு வெற்றியை மேன்மேலும் தரும். உறவினர்களின் வருகையால் சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சில விஷயங்கள் நடைபெறும்.

கும்ப ராசி நேயர்களே...!

பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள திட்டமிடுகிறீர்கள். தொலைபேசி வழியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து அடையும்.

மீன ராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் உங்களது புகழ் கூடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.