துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும்.தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள் இது. குடும்பத்தினர் பெருமைப்படும் வகையில் சில முக்கிய நிகழ்ச்சிகளும் நடக்கலாம்.

விருச்சிக ராசி நேயர்களே..!

விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நாள் இது. இறுதியாக நீங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளின் நல்ல முடிவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். 

தனுசு ராசி நேயர்களே...!

உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் வராமல் இருந்திருக்கும் ஆனால் இப்போது வந்து அடையும். இழுபறியாக இருந்து வந்த பல வேலைகள் விரைவில் முடியும்.வங்கி சேவையில் இருந்த சிறு தொகையை எடுத்து செலவழிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுடைய நண்பர்களால் அதிக உதவி கிடைக்கக்கூடிய நாள் இது. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வது நல்லது. உடல் நலம் சீராக வைத்துக்கொள்வது நல்லது.உற்சாகமாக பணி புரிய கூடிய நாள் இது. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.

மீனராசி நேயர்களே..!

உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள் இது. பல புண்ணிய காரியத்திற்கு பொருள் உதவி செய்வீர்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு அகலும்