துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே..!

தவிர்க்க முடியாத சில செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சற்று தாமதமாக வரும்.

விருச்சிக ராசி நேயர்களே..! 

எதிர்பாராத வகையில் உங்களுக்கு இன்று பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை மகிழ்விப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

உங்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகம் பெருகும். புதிய வாய்ப்புகள் உங்களை வீடு தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். யோகா தியானம் ஆகியவற்றில் உங்கள் மனதை கட்டுப்படுத்துவது நல்லது.

கும்ப ராசி நேயர்களே..!

இரவு பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி எந்த செயலையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மீன ராசி நேயர்களே..!

உங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை அமையும். வங்கியில் கடன் உதவி கிடைக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். மனைவி வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டு.