துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய பேச்சில் கம்பீரம் பிறக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பிரபலமான ஒருவருடன் சாதுர்யமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.

விருச்சக ராசி நேயர்களே..!

எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை படுவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பழைய கடன் பற்றிய கவலைகள் உங்களுக்கு அவ்வப்போது வந்து செல்லும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது. இல்லை என்றால் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கும்ப ராசி நேயர்களே எதையும் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

மீனராசி நேயர்களே...!

புதிய திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேறும் நாள் இது. பூர்வீக சொத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.