துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்...! 

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து கொண்டு பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கும் நாள் இது. விருந்தினர் வருகை ஏற்படலாம்.

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடுவீர்கள்.  மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க கூடிய சூழல் ஏற்படலாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு வந்து கிடைக்ககிடைக்கும். 

தனுசு ராசி நேயர்களே..!

இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் உங்களுக்கு வந்து போனாலும் நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

மகர ராசி நேயர்களே..!

சகோதர வகையில் ஒற்றுமை கூடிய நாளில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்யக்கூடிய நாள் இது. பணவரவு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சொத்து தொடர்பான அனைத்து வழக்கில் இருந்து நல்ல தீர்ப்பு கிடைக்க கூடிய நாளில் இது.

மீன ராசி  நேயர்களே..! 

அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை உங்களுக்கு குறையும். பழைய கடன் பிரச்சினைகள் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உறவினர் மத்தியில் உங்களுடைய மதிப்பு எப்போதும் ஓங்கி நிற்கும். பால்ய நண்பனை சந்திக்க அதிக ஆர்வம் கொண்டவர் நீங்கள்.