துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

தந்தைவழி உறவினர்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கு தலைமைதாங்கும் பண்பை வளர்த்துக் கொள்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கச் செய்யும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடு உங்களுக்கு நீங்கும். பிரச்சனை வந்தாலும் அதனை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. நீண்ட நாள் பழுதாகி இருந்த வாகனம் இன்று சரி செய்வீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும்.கல்யாண பேச்சு வார்த்தை பேசக் கூடிய நாள் இது.

மகர ராசி நேயர்களே..!

மனைவி வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் புதிய வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உங்களது பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை உண்டாகும் நாள் இது.

கும்ப ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக விலகி இருந்த உங்களுடைய நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களால் சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

மீனராசி நேயர்களே..!

ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்.கடந்த கால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழும் நாள் இது. மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை அனைவரும் மதிப்பார்கள்.