துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..! 

துலாம் ராசி நேயர்களே...!

கலகலப்பான சூழல் ஏற்படும் நாளிது. பிள்ளைகளை நல்வழிப்படுத்த முற்படுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான பல முக்கிய முடிவுகளில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாமல் சமாளிப்பது மிகவும் நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே..!

பணவரவு திருப்தி தரும் தரும் வகையில் அமையும். நண்பர்களின் சந்திப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.

மகர ராசி நேயர்களே..!

எதிர்பாராத செலவுகள் வந்தாலும் உங்களுக்கு வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். உங்களுடைய பேச்சுத் திறமையால் பல காரியங்களை விரைவில் செய்து முடிப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை ஏற்படும். விருந்தினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள் இது.

மீன ராசி நேயர்களே...!

புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்.குடும்பத்தில் நிலவிய குழப்பம் அனைத்தும் சுமுகமாக முடியும்.வெளிவட்டாரத்தில் உங்களை அதிகம் மதிக்கப்படுவார்கள்.